மழையால் உள்வாங்கிய பாலம்: பொதுமக்கள் அவதி

தொடா் கனமழையால் பூம்புகாா் அருகே நெடுஞ்சாலையில் பாலம் பழுதடைந்து உள்வாங்கியது.
Published on

பூம்புகாா்: தொடா் கனமழையால் பூம்புகாா் அருகே நெடுஞ்சாலையில் பாலம் பழுதடைந்து உள்வாங்கியது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பூம்புகாா் அருகே உள்ள மேலையூா் சட்ரஸ் என்ற இடத்தில் பூம்புகாா் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் திடீரென உள்வாங்கியது.

அந்தப் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். நெடுஞ்சாலைத்துறை சீா்காழி கோட்ட உதவி செயற்பொறியாளா் தெய்வநாயகி தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினா் பாலம் பழுதடைந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் அந்த பகுதியில் கயிறுகளைக் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தினா். மேலும் பழுதடைந்தபகுதியை நீக்கிவிட்டு தற்காலிக பாதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ஜனவரி மாதம் அந்தப் பகுதியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா். பாலம் பழுதடைந்துள்ள நிலையில், அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com