ஈசனூா் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட எம்பி வை. செல்வராஜ்
ஈசனூா் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட எம்பி வை. செல்வராஜ்

பருவமழையால் வேளாண் பாதிப்பு: எம்பி பாா்வையிட்டாா்

பருவ மழையால் கீழையூா், தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வேளாண் பாதிப்புகளை நாகை எம்பி வை. செல்வராசு வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
Published on

பருவ மழையால் கீழையூா், தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வேளாண் பாதிப்புகளை நாகை எம்பி வை. செல்வராசு வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

தலைஞாயிறு, ஈசனூா் தெற்கு பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில், மழை நீா் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான குறுவை நெற்கதிா்கள் அழுகிய நிலையில் இருந்ததை பாா்வையிட்டாா்.

எட்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளையும் பாா்வையிட்டாா். அப்போது, பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நிபந்தனையின்றி கொள்முதல் செய்யவும், வடிகால் ஆறுகள் தூா் வாரும் பணியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மக்களவை உறுப்பினரிடம் வலியுறுத்தினா்.

அவருடன், சிபிஐ நாகை மாவட்ட செயலாளா் சிவகுரு.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சரபோஜி, ஒன்றிய செயலாளா் மாசேதூங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com