Enable Javscript for better performance
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவனத்துக்கு...

    By DIN  |   Published on : 01st December 2016 03:01 AM  |   அ+அ அ-   |    |  

    காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள உழவர் உதவியகத்திலோ அல்லது விரிவாக்கப் பணியாளர்களிடம் பயிர்க் காப்பீட்டுக்கான விண்ணப்பங்களை வாங்கி சர்வே எண் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 -ஆம் தேதிக்குள் அந்தந்த உழவர் உதவியகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    பயிர்க் காப்பீட்டுக்கான தொகை முழுவதும் அரசே செலுத்துவதால், விவசாயிகள் யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை. இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நிர்வாகத்தினரிடம் வழங்க வேண்டும் என காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai