Enable Javscript for better performance
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ரத்ததானம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பகரத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாமை நடத்தியது.

    அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா முகாமை தொடங்கிவைத்தார்.
     ரத்த வங்கி அதிகாரி மதன்பாபு தலைமையில் ரத்த வங்கி முதன்மை அமைப்பாளர் எஸ்.தர்மராஜ் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர். 35 யூனிட் ரத்தம், முகாம் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    அதன் மாவட்ட துணைச் செயலர் முகம்மது நிசார் ரத்ததான முகாம் நோக்கம் குறித்துப் பேசினார். மருத்துவ அணிச் செயலர் எம்.லியாக்கத் அலி வரவேற்றார். கிளைச் செயலர் எஸ்.முகம்மது ரியாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai