Enable Javscript for better performance
காரைக்காலில் மூடிக்கிடந்த ஏடிஎம் மையங்கள்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெற்றது முதல் வங்கிக் கிளைகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் பணம் எடுக்க வரிசையாக நிற்கும் நிலை தொடர்கிறது.
    இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 நாள்களும் வங்கிகள் திறக்கப்படவில்லை. சனிக்கிழமை ஒருசில ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
    ஆனால், ஞாயிற்றுக்கிழமை பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்கள் சில மட்டுமே இயங்கின. பிற தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai