Enable Javscript for better performance
காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையை நவீனப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையை நவீனப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

    By DIN  |   Published on : 28th November 2016 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் உள்ள கூட்டுறவு நூற்பாலையை நவீனப்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
    காரைக்காலில் இயங்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் வரை, ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்ததற்காக, வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை, கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
    காரைக்காலில் உள்ள கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்கள், தங்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக இந்த ஆலை நவீனப்படுத்தப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஆலைத் தொழிலாளர்களுக்கு இடைக்கால ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரம் தரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தப்படி இத்தொகை வழங்கப்படுகிறது.
    காரைக்கால் ஆலை நவீனப்படுத்தும் நிலையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.நிச்சயமாக புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆலையை வெகு விரைவாக நவீனப்படுத்தி, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai