Enable Javscript for better performance
டிச. 6-இல் தர்னா போராட்டம்: தமுமுக முடிவு- Dinamani

சுடச்சுட

    

    பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, டிச. 6-இல் காரைக்காலில் தர்னா போராட்டம் நடத்த தமுமுக முடிவு செய்துள்ளது.
    காரைக்கால் மாவட்ட தமுமுக பொதுக்குழுக் கூட்டம், அதன் அலுவலகத்தில் மாவட்டச்  செயலர் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். மசூதி இடிப்புக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் தமுமுக சார்பில் டிச. 6-இல் கருஞ்சட்டை  அணிந்து தர்னா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    மாநிலச் செயலர் அலாவுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜஹான், யூசுப், ராஜா முஹம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். மாவட்ட துணைச் செயலர் அப்துல் காசிம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai