Enable Javscript for better performance
பெருமாள் கோயிலில்  டிச.1-இல் பவித்ரோத்ஸவம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் பெருமாள் கோயிலில் டிச.1 முதல் பவித்ரோத்ஸவ நிகழ்ச்சி தொடங்குகிறது.  
    காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டாக பவித்ரோத்ஸவம் வரும் வியாழக்கிழமை (டிச.1) இரவு வாஸ்து ஹோமத்துடன் தொடங்குகிறது. 4-ஆம் தேதி வரை தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. மாலை பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. மூலவர், உத்ஸவர் உள்ளிட்டோருக்கு பட்டு நூல் கொண்ட மாலை சாற்றப்படுகிறது.
    இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: திருப்பவித்ரோத்ஸவம் என்பது ஆண்டில் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி. இதுவொரு குடமுழுக்குக்கும் நிகரானது. 3 நாள்களும் புனிதநீர் யாகசாலையில் வைத்து பூஜை செய்து சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
    கோயிலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அதைப் போக்கி கோயிலை புனிதப்படுத்தும் நிகழ்ச்சியாக இது நடத்தப்படுகிறது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai