Enable Javscript for better performance
அக்.20-இல் தீபாவளி சிறப்பங்காடி திறப்பு: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    அக்.20-இல் தீபாவளி சிறப்பங்காடி திறப்பு: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் தீபாவளி சிறப்பங்காடி அக். 20-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பங்காடி காரைக்காலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக திறக்கப்படுவது வழக்கம்.
    இந்நிலையில், நிகழாண்டு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே சிறப்பங்காடியைத் திறக்க வேண்டும் என்றும், காரைக்காலில் 2 இடங்களில் அங்காடி திறக்கப்படவேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    இந்த நிலையில், தீபாவளி சிறப்பங்காடி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் கீதா உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
    கூட்டத்தில், தீபாவளி அங்காடி காரைக்காலில் விற்பனைக் குழு வளாகத்தில் அக்.20-ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் வரை அங்காடி செயல்படும். கடந்த ஆண்டு ரூ.85 லட்சத்தில் வணிகம் நடைபெற்றது. நிகழாண்டு விற்பனை இலக்காக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    அனைத்துப் பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க போதுமான அளவில் கொள்முதல் செய்யவும், முக்கியமாக துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, பொட்டுக்கடலை, வெல்லம், ரவா, மைதா உள்ளிட்ட பொருள்களை அரசின் மானிய விலையில் விற்பனை செய்யவும், பட்டாசு, இனிப்பு வகைகள், நெய், அரிசி, துணி வகைகள் உள்ளிட்டவைகளும் தீபாவளி சிறப்பங்காடியில் விற்பனை செய்யவும், அரசு சார்பு நிறுவனங்கள் அல்லாது தனியார் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கும் ஸ்டால்கள் ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai