Enable Javscript for better performance
உயிரிழந்த கல்லூரி மாணவி நினைவாக ஆம்புலன்ஸ் வாகனம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கல்லூரி மாணவியின் நினைவாக, அவரது குடும்பத்தினர் சார்பில் நிரவி கமாலியா சங்கத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம்  வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
    காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்த இ.எம்.முகம்மது நைனா மரைக்காயர் மகள் மெகபூப் நிஷா. இவர், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை படித்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்தினர், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்கி, கமாலியா சங்க நிர்வாகிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். இந்த ஆம்புலன்ஸ் நிரவி பகுதி மட்டுமல்லாது பிற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என கமாலியா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai