Enable Javscript for better performance
காரைக்கால் ரயில் நிலையத்தில் கொள்ளையன் கைது- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
    காரைக்கால் ரயில் நிலையத்தில் கடந்த 2 நாள்களாக 2 பேர் சுற்றித் திரிவதாக நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ரயில் நிலையத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரைக் கண்டதும் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.
    இதனால் அவரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் (65) என்பது தெரியவந்தது.
    முதல்கட்ட விசாரணையில், மகேந்திரனும் அவருடன் சுற்றித்திரிந்தவரும், பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மகேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai