Enable Javscript for better performance
சிற்றேரிகள் அமைக்கும் பணிக்கு 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சிற்றேரிகள் அமைக்கும் பணிக்கு 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் சிற்றேரிகள் அமைக்கும் பணிக்கு 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் பகுதியில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் தொடங்கிய காலம் முதல் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
    நிகழாண்டு, 100 நாள் பணிக்கு இதுவரை 32 நாள்கள் மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. எஞ்சிய நாள்கள் வேலை தரக்கூடிய வகையில் வாய்ப்புகள் இருந்தும், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இதுவரை தொழிலாளர்களுக்கு பணி வழங்கவில்லை.
    தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால், தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். நிகழாண்டு இறுதிக்குள் 100 நாள்கள் வேலை தரும் வகையில், காரைக்காலில் படுதார்கொல்லை, செட்டிக்கோட்டகம், அகரமாங்குடி உள்ளிட்ட இடங்களில் சிற்றேரிகள் வெட்டும் பணியில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்ட  தொழிலாளர்களைப் பயன்படுத்தவேண்டும். நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்தி தண்ணீரை வேளாண் பயன்பாட்டுக்கு தேக்கிவைக்கவேண்டும். இந்த ஏரியை ஆழப்படுத்த  100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai