Enable Javscript for better performance
நெருக்கடியான இடத்தில் ஆளுநர் குறைகேட்பு மையம்: பொதுமக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    நெருக்கடியான இடத்தில் ஆளுநர் குறைகேட்பு மையம்: பொதுமக்கள் புகார்

    By DIN  |   Published on : 15th October 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் உள்ள ஆளுநர் குறை கேட்பு மையம் நெருக்கடி மிகுந்த இடத்தில் செயல்படுவதால் சிரமம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வியாழக்கிழமை தோறும் மாலை 5 முதல் 6 மணி வரை புதுச்சேரியிலிருந்தவாறு காணொலி மூலம் பொதுமக்களிடம் குறைக்கேட்டு வருகிறார். இதற்கான மையம் ஆட்சியரகத்தில் உள்ள தேசிய தகவல் மைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
    இங்கு போதுமான இடவசதி இல்லாததால் குறைகள் கூறவருவோர் அமர இடமின்றி பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
    மேலும், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை.
    இதனால், பொதுமக்கள் காணொலி மூலம் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, குறைகேட்பு மையத்தை போதுமான இடவசதி உள்ள இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai