Enable Javscript for better performance
மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அமைச்சர் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அமைச்சர் கேள்வி

    By DIN  |   Published on : 15th October 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கல்வித் துறை ஆண்டுக்கு ரூ.875 கோடி செலவிடும்போது, மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடுவது ஏன் என அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆசிரியர்களிடையே கேள்வி எழுப்பினார்.
    புதுச்சேரி கல்வித்துறை சார்பில், திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு, ஆசிரியர் விருது பெற்றவர்களைப் பாராட்டியும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் நிர்வாகிகளைப் பாராட்டியும் பேசியது:
    புதுச்சேரி கல்வித்துறை ஆண்டுக்கு ரூ.875 கோடி செலவு செய்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை தருகிறது.
    இருந்தபோதிலும் கல்வித் தரம் குறையவும், அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளை மாணவர்கள் நாடுவதற்கான காரணம் என்ன? இது கல்வித்துறை  தவறா, சமூகத்தின் தவறா, பெற்றோர் தவறா, மாணவர்கள் தவறா?, ஆசிரியர்கள் தவறா என்பதை ஆசிரியர்கள்தான் கூறவேண்டும்.
    தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது மட்டும் சாதனை அல்ல, மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் வகையில் அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டியதும் ஆசிரியர் கடமை என்றார் அமைச்சர்.
    நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, கல்வித் துறை துணை இயக்குநர் ஜி.சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் வி.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai