Enable Javscript for better performance
"மீன்வளர்ப்பு ஊக்குவிக்கப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் மீன் வளர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் தெரிவித்தார்.
    மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மேலாண்மைக் குழு கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ப.பார்த்திபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு, புதிதாக மீன் வளர்க்க விரும்புவோர் பதிவு செய்யும் முறை, மீன் வளர்ப்புக்கான குளம் சீரமைப்புக்கு மானியம் அளித்தல், முகமைக்கு ஆடிட்டர் தேர்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் ஆண்டுகளில் மீன்வளர்ப்பு ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதலான குளங்களில் மீன் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
    கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இணை இயக்குநர் சாந்தாவில்லியம்ஸ், மீன்வளத் துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai