காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் 11-ஆம் வகுப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி முதல்வர் பி.ஹெலன்மேரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோட்டுச்சேரி பகுதி ராயன்பாளையத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பில் 12 காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் படித்து தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவியர் நிபந்தனையின்படி 11-ஆம் வகுப்பில் சேருவதற்கு தகுதியுடையவர்களாவர்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும், நவோதயா வித்யாலயா விதிமுறையின்படி சேர்க்கை நடைபெறும். இந்தப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் கொண்ட பிரிவு மட்டும் உள்ளது. அனைத்து பாடங்களும் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படும்.
11-ஆம் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் 1.7.2017 அன்று 14 முதல் 18 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். தரமான சி.பி.எஸ்.இ. முறை கல்வி, உணவு, உடை, தங்கும் வசதி, கணினிப் பயிற்சி உள்ளிட்டவை நிபந்தனையின்படி இலவசமாக தரப்படுகிறது. விண்ணப்பங்களை காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் கட்டணமின்றி
பெற்றுக்கொள்ளலாம். பள்ளி இணையதள -இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பள்ளிக்கு 15.6.2017-க்குள் வந்துசேரவேண்டும். பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.