காரைக்கால் அருகே பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை இரவு எரிந்து நாசமானது.
காரைக்கால் அருகேயுள்ள பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். காரைக்கால் வேளாண் கல்லூரியில் பணியாற்றிவரும் இவர், புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் திருநள்ளாறு பகுதியிலிருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். பச்சூர் அருகே சென்றபோது, சீர்காழி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன், செல்வம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. காயமடைந்த செல்வம் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, பள்ளி வேன் ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.