நெடுங்காடு பகுதியில் நண்டலாற்றங்கரையில் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பாக 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகேயுள்ள குளக்குடி கிராமத்தையொட்டிய நண்டலாற்று கரையோரத்தை செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் வட்டாட்சியர் முத்து தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டதில் ஆற்றங்கரையோரம் மணல் அள்ளியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் முத்து, நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில் பொன்பேத்தி, குளக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கந்தசாமி, ஐயப்பன், பன்னீர்செல்வம், மதி, தர்மலிங்கம், பக்கிரிசாமி, மெய்யழகன், நடராஜன், வெங்கடேசன் ஆகி 9 பேர் மணல் அள்ளியது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது
வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.