நிரவி பகுதியில் விவசாயிகளுக்கு தீவனப்புல் சாகுபடி குறித்த பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், வேளாண்துறையின் மூலம் செயல்பட்டுவரும் ஆத்மா திட்டத்தின் கீழ் நிரவி கிராமத்தில் தியாகி.கல்யாணசுந்தரம் ஆத்மா குழுவைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் இதர கால்நடை விவசாயிகளுக்கு தீவனப் புல் சாகுபடி குறித்த வேளாண் பயிற்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
விவசாயிகள் கலந்துகொண்ட பயிற்சி முகாமை காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கா.மதியழகன் தொடங்கிவைத்தார். ஆத்மா அமைப்பின் பணிகள் குறித்தும், விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார். வேளாண் துணை இயக்குநர் அருணன் சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து வேளாண் இணை இயக்குநர் முகமதுதாசிர் தீவனப் புல் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப விளக்கவுரையாற்றினார். இதில் தீவனப்புல் வகைகள் மற்றும் அதன் சாகுபடி குறித்து பல்வேறு தொழில்நுட்ப கருத்துகளை விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார்.
அதன் பிறகு 4 வகை தீவனப்புல் கரணைகள் நடும் முறை குறித்து செயல்விளக்கம் செய்துகாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிரவி வேளாண் அலுவலர் இந்துமதி, ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சங்கீதா மற்றும் நிரவி உதவி வேளாண் அலுவலர் நச்சுப்பிள்ளை மற்றும் வேளாண் களப்பணியாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்தப் பயிற்சியானது அடுத்த ஆறு வாரங்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நிரவி கோவில்பத்தில் நடைபெறும். இதில் ஆத்மா குழுவில் உள்ள கால்நடை வளர்க்கும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.