"திருநள்ளாறு கோயில் அலுவலக இடத்தை உடனடியாக மாற்ற வேண்டும்'

திருநள்ளாறு கோயில் அலுவலக இடம் நெருக்கடி மிகுந்ததாக இருப்பதால், உடனடியாக இடத்தை மாற்ற வேண்டும் என கோயில்
Updated on
1 min read

திருநள்ளாறு கோயில் அலுவலக இடம் நெருக்கடி மிகுந்ததாக இருப்பதால், உடனடியாக இடத்தை மாற்ற வேண்டும் என கோயில் ஸ்தானிகரும், காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளருமான வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் கூறினார்.
இதுகுறித்து காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது.
கோயில் வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஒரு கெட்ட சகுனத்தையே காட்டுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தை கோயிலுக்கு வெளியே கொண்டுவர வேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கோயில் மற்றும் கோயில் சுற்றுவட்டாரத்தில் திறந்தவெளி பகுதியே இல்லை. காற்றோட்டமில்லாமல், எல்லா இடங்களிலும் கான்கிரீட் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கக்கூடிய சூழலில், இதுபோன்ற தீ விபத்து ஏற்படும்பட்சத்தில், பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறிவருகிறோம். புதுச்சேரி அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது.
ராஜகோபுரம் மற்றும் 2-ஆவது கோபுரத்துக்கிடையே  பஞ்சமூர்த்திகளின் வாகனங்கள் வைக்கும் மண்டபம் உள்ளது. இங்கு வாகனங்கள் வைக்கப்படுவதில்லை. காற்று புகமுடியாத வகையில் இந்த மண்டபத்தை மாற்றுப் பணிகளுக்காக அடைத்துவிட்டனர். கோயிலுக்குள்ளேயும், வெளியேயும் கடைகளால் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாராளமான திறந்தவெளி இடமே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
உடனடியாக இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கோயில் அலுவலகத்தை கோயிலுக்கு வெளியே மண்டபத்தில் செயல்படுத்துவதற்கேற்ப மாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com