காரைக்கால் மாவட்ட சிறந்த இளைஞர், மகளிர் மன்ற விருது பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா, கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர், மகளிர் மன்றத்துக்கு மாவட்ட இளைஞர் விருது ரூ. 25 ஆயிரம், சான்றிதழ் வழங்கவுள்ளது. மாவட்ட அளவில் தேர்வு பெறும் மன்றமானது, மாநில அளவிலான விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மன்றத்துக்கு ரூ. ஒரு லட்சமும், சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மன்றமானது தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தேசிய அளவில் 3 மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் தர மன்றத்துக்கு ரூ. 5 லட்சமும், இரண்டாம் தர மன்றத்துக்கு ரூ. 3 லட்சமும், மூன்றாம் தர மன்றத்துக்கு ரூ. 2 லட்சமும், சான்றிதழும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நேரில் வந்து விண்ணப்பப் படிவங்களை பெற்று, சேவைகள் செய்ததற்கான தகுந்த ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து, விண்ணப்பங்களை வரும் செப். 25-ஆம் தேதிக்குள், எண். 23, ஷா கார்டன், நேரு யுவகேந்திரா அலுவலகம், காரைக்கால் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமா அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.