கொள்ளிடத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றியம் நாதல்படுகை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் நாதல்படுகை கிராமத்துக்கு குடிநீர் வழங்கக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகேந்திரப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொள்ளிடம் போலீஸார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நாதல்படுகை கிராமத்துக்கு குடிநீர் வழங்கவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.