Enable Javscript for better performance
பள்ளிகளில் பொங்கல் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் பல்வேறு பள்ளிகளில் பொங்கல் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயாவில் பொங்கல் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவ, மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர்.
     கீழவாஞ்சூர் மகாலட்சுமி வித்யா மந்திர் பள்ளியில், பள்ளி முதல்வர் ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் பங்கேற்ற உறியடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
     காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பொங்கல் சிறப்பு குறித்து மாணவர்கள் விளக்கிப் பேசினர்.  உழவுத் தொழில் செய்யும் விவசாயிகளின் நிலை குறித்து மாணவர்கள் பாடல் பாடினர். கபடி, உறியடி போன்ற விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
     நிரவி பகுதியில் செயல்படும் யுனிவர்செல் அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் செய்து வழிபட்டனர். ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.         

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai