Enable Javscript for better performance
அரசு நடுநிலைப் பள்ளி விளையாட்டு விழா பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறு அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    திருநள்ளாறு பகுதி சுரக்குடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன. 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பல்வேறு வகை போட்டிகளில் ஈடுபட்டனர். நடுவர் குழுவினர் பரிசுக்குரியோரை தேர்வு செய்தனர்.
    பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை ஜெயா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன், பஞ்சாயத்து அலுவலக மேலாளர் துரைக்கண்ணு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு, மாணவ மாணவிகள் கல்விக்கு காட்டவேண்டிய ஊக்கம், விளையாட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து கருத்துகளைக் கூறினர்.
    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பதக்கம், பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
    முன்னதாக, பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai