Enable Javscript for better performance
அரியவகை நாட்டு மரங்கள் புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டியில் 2 நாள்கள் நடைபெறும் அரிய வகை நாட்டு மரங்களின் புகைப்பட கண்காட்சியில், பறவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவை விளக்கும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது .
    இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கை போஸ் மக்கள் பணியகம் நிறுவனர் ஜெயானந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசும்போது, தமிழகமெங்கும் இதுபோல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வளங்களை நல்ல முறையில் விட்டுச் செல்ல வேண்டும். போஸ் மக்கள் பணியகம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, வளர்க்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
    தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு நாட்டு மரக் கன்றுகளின் விதைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப. ஆடலரசன், ஜி.டி. பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் டி. ராஜா, வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கே. எஸ். செந்தில்குமார், கிரியேட் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் இரா. ஜெயராமன், பாரத மாதா தொண்டு நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன், நீர் நிலைப் பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் முதல் நாளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai