Enable Javscript for better performance
இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    திருவாரூர் அருகேயுள்ள வடகரை, வாழவாய்க்காலைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). இவர் பிப். 4-ஆம் தேதி இரவு திருவாரூர் மேம்பாலம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
    இந்நிலையில், புதன்கிழமை இரவு போலீஸார் வாழவாய்க்கால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், கேக்கரை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), வாழவாய்க்காலைச் சேர்ந்த முரளி (20) என்பதும், ராமகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai