Enable Javscript for better performance
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பிப்.19 பிரம்மோத்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பிப்.19 பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவம் வருகிற 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் 14 நாள்கள் நடக்கக்கூடிய பிரம்மோத்ஸவ தொடக்கத்திற்கான கொடியேற்றம் வரும் 19-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதே நாள் இரவு சூரிய பிரபையில் பெருமாள் வீதியுலாவும், 2-ஆம் நாளான 20-ஆம் தேதி சந்திர பிரபையிலும் வீதியுலா நடைபெறுகிறது. 21- ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 22-ஆம் தேதி கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 24-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது.
    தொடர்ந்து 25-ஆம் தேதி காலை திருமஞ்சனமும், மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் ருத்ர வேடத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். 26-ஆம் தேதி காலை வெண்ணெய்தாழி சேவையும், இரவு குதிரை வாகனத்தில் வீதியுலாவும், 27 -ஆம் தேதி தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மூலவர் (ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள்) திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    மார்ச் 1-ஆம் தேதி திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளுடன் சேர்ந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது. 2-ஆம் தேதி சப்தாவர்ண புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    தெப்ப உத்ஸவம் : நிகழ்ச்சின் நிறைவாக மார்ச் 3-ஆம் தேதி சந்திரபுஷ்கரணியில் தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியாக புஷ்பப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
    உத்ஸவத்தையொட்டி தினமும் யாகசாலை, திவ்யபிரபந்த சேவையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் குழுவினர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்தஜன சபாவினர் செய்துவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai