Enable Javscript for better performance
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றுத் திரும்பிய காரைக்கால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
    காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு என்.சி.சி. மாணவர்கள் இ.பைந்தமிழ்ராஜா, ஆர்.சத்ரியன் மற்றும் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திவ்யராஜ், விக்னேஷ் ஆகியோர், கடந்த ஜன.26-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். இவர்களை காரைக்கால் என்.சி.சி. அலுவலக என்.சி.சி. ராணுவ பயிற்றுநர்கள், என்.சி.சி. அலுவலர்கள் தேர்வு செய்து அனுப்பினர். மாணவர்கள் நால்வரும், புதுதில்லியில் ஒரு மாத காலம் தங்கி பயிற்சி பெற்ற பின்னர் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். காரைக்கால் திரும்பிய நால்வரும் காரைக்கால் மாவட்ட என்.சி.சி. கமாண்டிங் அலுவலர் சி.எஸ்.சர்மா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை சந்தித்தனர். மாணவர்களுக்கு சால்வை அணிவித்து ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. அலுவலர்கள் எம்.எம்.காந்தி, காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai