Enable Javscript for better performance
திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடங்குகிறது

    By DIN  |   Published on : 09th February 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் சார்பில் 6 நாள்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியையொட்டி, 13-ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பிப்.9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகே உள்ள கெய்தான் மண்டபத்தில் நடைபெறுகிறது.
    முதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. 11-ஆம் தேதி வரை 6 முதல் இரவு 10.25 மணி வரையிலும், 12 மற்றும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணி வரையிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    மகா சிவராத்திரி நாளான 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 14-ஆம் தேதி அதிகாலை 3.55 மணி வரை பல்வேறு சிறப்பு நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர். ஏறக்குறைய ஆயிரம் கலைஞர்கள் இந்த 6 நாள் நாட்டியாஞ்சலியில் பங்கேற்பர் என தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai