Enable Javscript for better performance
ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவர்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவர்

    By DIN  |   Published on : 09th February 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீசுவரசுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலில், ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ கால பைரவர் சன்னிதி, ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னிதிகள் உள்ளன.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
    ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அஷ்டமி பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai