Enable Javscript for better performance
கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை கைவிடக் கோரி மீனவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை கைவிடக் கோரி மீனவர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் கடற்கரை மேலாண்மைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்காலில் கடற்கரை மேலாண்மைத் திட்டம் தொடர்பாக அண்மையில் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட நிர்வாகம் நடத்தியது. இதில், மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்று திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    தவிர, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை (மார்ச் 23) போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
    அதன்படி, காரைக்கால் மாவட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ அமைப்பினர் காரைக்கால் கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள், தேசிய மீனவர் பேரவையினர், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
    போராட்டத்தின்போது, கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீனவர்களை பாதுக்காக அரசு முன்வரவேண்டும். இத்திட்டம் நிறைவேறினால் மீனவர்கள் கடற்கரையிலிருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகும். இதன்மூலம், கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
    அப்படியான சூழல் உருவாகும்போது, கடலோரத்தில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். எனவே, மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக விரிவான போராட்டம் நடத்தப்படும் என்று பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai