Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி காரைக்காலில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் கோரி காரைக்காலில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்கால் மாவட்ட விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கலியமூர்த்தி தலைமை வகித்தார்.
    உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும். காரைக்காலில் ஏரிகள் வெட்டுவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை விரைவாக அமல்படுத்தவேண்டும்.
    மாவட்டத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்களை அழிக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும்.
    காரைக்காலில் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டும். இலவச மனைப்பட்டா தரப்பட்ட நிலம் யாவும் தாழ்வாக இருப்பதால், வீடு கட்டும் விதத்தில் மணல் நிரப்பித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
    விவசாய சங்க தேசியச் செயலர் ஏ.ராமமூர்த்தி, மாநில பொதுச்செயலர் டி.கீதநாதன், காரைக்கால் பிரதேச இந்திய கம்யூனிஸ்ட் செயலர் பி.மதியழகன், மாநில குழு உறுப்பினர் க.தமிழழகன், துணைச் செயலர் பி.ஜி.பாலசுப்ரமணியன், பிரதேச பொருளர் கே.பக்கிரிசாமி, ஏ.எஸ்.ரவி, ஜி.புண்ணியமூர்த்தி, எம்.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai