Enable Javscript for better performance
சிறையில் 2 செல்லிடப்பேசிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் கிளைச் சிறையில் கைதிகளிடமிருந்து 2 செல்லிடப்பேசிகளை சிறைத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால் கிளைச் சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தவிர, புதுச்சேரியிலிருந்தும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
    கிளைச் சிறை துணைக் கண்காணிப்பாளர் கோபிநாத், முதன்மைக் காவலர்கள் அதிபதி, ஸ்ரீவிநாயகம் மற்றும் சிறைக் காவலர்களுடன் விசாரணை கைதிகள் தங்கியுள்ளஅறைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டபோது, தரையில் சிமென்ட் காரைகள் பெயர்க்கப்பட்டு பள்ளம் தோண்டி அதில் செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்டவைகள் புதைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
    தொடர்ந்து, தண்டனைக் கைதிகள் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டபோது, ஆயுள் தண்டனை கைதி நசீர்முகமது என்பவரின் அறையில் செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
    இதையடுத்து, சிறைத் துறையினர் கைதிகளிடமிருந்து செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளர் கோபிநாத் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai