Enable Javscript for better performance
நகராட்சி இணையதள சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகராட்சிக்கென உருவாக்கப்பட்ட இணையதள சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
    காரைக்கால் நகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை பெறவும், நகராட்சித் திட்டங்களை அறிந்துகொள்ளவும் நகராட்சிக்கென புதிய இணையதள சேவை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவையை மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தொடங்கிவைத்தார்.
    இதுகுறித்து அலுவலர்கள் கூறியது: நகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய விண்ணப்பித்தல், திருமண சான்றிதழ் மற்றும் தொழில் உரிமம் பெற விண்ணப்பித்தல், புகார் தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த இணைய தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், நகராட்சி சம்பந்தமான அரசாணைகள், நகராட்சி சட்டம் மற்றும் விதிமுறைகள், நகராட்சியால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒப்பந்தப்புள்ளி குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெறும். பொதுமக்கள் தங்களது சொத்து வரியை இந்த இணையதளம் மூலம் வரும் காலங்களில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், நகராட்சி ஆணையர் டி. சுதாகர், தேசிய தகவல் மைய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai