Enable Javscript for better performance
பயறு பயிர் பராமரிப்பு, பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பயறு பயிர் பராமரிப்பு, பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

    By DIN  |   Published on : 24th March 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயறு செடிகள் பராமரிப்பு மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    காரைக்கால் வேளாண்துறை அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் காரைக்கால் மாவட்டம், தென்னங்குடி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பயறு ஒன்டர் (பயறு அதிசயம்) முக்கியத்துவம் குறித்தும், பூச்சி மேலாண்மை குறித்தும் செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    வேளாண் துணை இயக்குநர் எஸ்.அருணன் பயிற்சியை தொடங்கிவைத்தார். ஆத்மா திட்ட துணை இயக்குநர் (பொ) ஆர்.ஜெயந்தி இந்த பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.
    காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெ.செந்தில்குமார் பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்த பயறு ஒன்டரின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
    தமிழ்நாடு பல்கலைக்கழக பயறு ஒன்டரானது, பூக்கள் உதிர்வதைக் குறைத்து, பயிர் விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும் வறட்சியை தாங்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு இதனை 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் பருவத்தில் தெளிக்கவேண்டும் என அவர் விவசாயிகளுக்கு விளக்கினார்.
    வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் எம்.கான்டீபன் பயறு வகை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் மேலாண்மை குறித்துப் பேசினார்.
    தென்னங்குடி வட்டாரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக தென்னங்குடி வேளாண் அலுவலர் கே.மகேந்திரன் வரவேற்றார். முகாம் ஏற்பாடுகளை ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் ஜி.மாலதி, டி.கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai