Enable Javscript for better performance
ரூ.18 கோடி நிலுவைத் தொகை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் தர்னா போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.18 கோடி நிலுவைத் தொகை வழங்கக்கோரி ஒப்பந்ததாரர்கள் தர்னா போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அரசு நிலுவையாக வைத்திருக்கும் ரூ.18 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
    அகில இந்திய கட்டுநர் சங்க காரைக்கால் பிரிவு சார்பில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களாக உள்ளோர், காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
    சங்கத் தலைவர் எஸ்.சாமிநாதன் தலைமை வகித்தார். போராட்டம் குறித்து அவர் கூறியது: பொதுப்பணித்துறையில் பல்வேறு கட்டுமானங்களை ஒப்பந்தம் எடுத்து செய்துவருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் செய்த தொகையாக ரூ.18 கோடி புதுச்சேரி அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இந்த தொகையை அரசு நிர்வாகம் வேறு பயன்பாட்டுக்கு திருப்பிவிடுவதால், ஒப்பந்ததாரர்களால் பணிகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவாக நிலுவைத் தொகையை அரசு தராவிட்டால், கட்டுமானப் பணிகளை நிறுத்திவிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
    இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai