Enable Javscript for better performance
லாட்டரி விற்பனை : போலீஸார் சோதனையில் 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்த சோதனையில் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. இதையடுத்து, டிஐஜி வி.ஜே.சந்திரன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர்கள் மரிய கிறிஸ்டின் பால், ஏழுமலை, உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    சோதனைப் பணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டபோது, பாரதியார் சாலையில் பஞ்சர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வரும் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (எ) பெர்லின் (63), இதேபோல் சலூன் கடையொன்றில் வலத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (எ) குழந்தை, தலத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (எ) ராஜா ஆகியோரும், ஒரு மதுபானக் கடையில் வினோத்குமார் (எ) வினோத் (38) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை வைத்துகொண்டு செல்லிடப்பேசி மூலம் கட்செவி அஞ்சலில் சீட் எண்களை அனுப்பி விற்பனை செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    இதையடுத்து, வினோத்குமார், தியாகராஜன், வின்சென்ட் ராஜ், லட்சுமணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 மோட்டார் பைக்குகள், 7 செல்லிடப் பேசிகள், ரூ.3,500 ரொக்கம் உள்ளிட்டவைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபு, நால்வரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai