Enable Javscript for better performance
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் அருகே மேலகாசாக்குடியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் மேலகாசாக்குடி பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மிகப் பழைமையான இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 2013-இல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் குடமுழுக்கு நடைபெற்ற மாதம், நட்சத்திர நாளில் சம்வத்ஸரா அபிஷேகம் நடத்தப்பட்டுவருகிறது. 5-ஆம் ஆண்டாக அபிஷேக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் சுவாமிகளுக்கான திருக்கல்யாண உத்ஸவம் இரவு நடைபெற்றது. ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாணக் கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு வீற்றிருந்தார்.
    ஐதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமாங்கல்ய தாரணத்தின்போது, பக்தர்கள் வைத்திருந்த அட்சதையை அவரவர் மேல் போட்டுக்கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
    நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா மற்றும் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai