Enable Javscript for better performance
இயேசு சிலைக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளியையொட்டி, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முத்தி செய்யும் நிகழ்ச்சியும், சிலைக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
    தவக்காலத்தின் நிறைவு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக, புனித வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. திருச்சிலுவை பாதை ஆராதனை மற்றும் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு நடத்தப்பட்டது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர். காரைக்கால் பங்குத் தந்தை, அருள்தந்தையர்கள் முன்னிலையில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் இயேசு சிலைக்கு முக்தி செய்தனர்.
     இதையடுத்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த இயேசு கிறிஸ்து சிலைக்கு ஏராளமானோர் மரிக்கொழுத்து வைத்து வழிபட்டனர்.
    ஈஸ்டர் கொண்டாட்டம் : புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் சனிக்கிழமை (மார்ச் 31) இரவு 11 மணிக்கு இயேசு உயிர்த்தெழும் விதமாக, ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெறுகிறது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai