Enable Javscript for better performance
காரைக்கால் அம்மையார் குளத்தில் நடராஜர், பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் அம்மையார் குளத்தில் நடராஜர், பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி

    By DIN  |   Published on : 31st March 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரமோத்ஸவம் நிறைவாக காரைக்கால் அம்மையார் குளத்தில் ஸ்ரீ நடராஜர் மற்றும் ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர்  கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பங்குனி உத்திரப் பிரமோத்ஸவ விழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. நிகழாண்டு இத்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் நிறைவாக அம்மையார் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோயிலில் காலை ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்பாள் வீதியுலாவாக தீர்த்தக் 
    கரைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.  அங்கு அஸ்திரத்தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.
    தொடர்ந்து, பகல் 12  மணியளவில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.
    இவ்விரு தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். மாலை பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் வீதியுலாவுக்குப் புறப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டது. 
    பிரமோத்ஸவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை (மார்ச் 31) ஸ்ரீ சண்டிகேசுவரர் வீதியுலா நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை அம்மையார் குளத்தில் தெப்பம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai