Enable Javscript for better performance
திருநள்ளாறில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி: இருவர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறில் புதன்கிழமை நள்ளிரவு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சித்த மூவரில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    திருநள்ளாறு மேலவீதியில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் புகுந்து, இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க 3 பேர் முயன்றனர். இவர்களது உருவம், நடவடிக்கைகள் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவானது.
    வங்கி அலுவலர் அளித்த புகாரின்பேரில், திருநள்ளாறு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
    இவர்களது புகைப்படங்களை போலீஸார் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தை சேர்ந்தோர் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
    பேட்டை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற போலீஸார், அங்கிருந்த கணேஷ் என்கிற கணேசமூர்த்தி (26), அன்பழகன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 
    மது அருந்தவும், செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இவர்களை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபு, இவ்விருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 
    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
    கண்காணிப்புக் கேமராவில் உருவம் தெளிவாக பதிவாகியிருந்ததும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து ஏராளமானோர் கவனத்துக்கு சென்றதுமே, குற்றவாளிகள் ஒரே நாளில் பிடிபட காரணமானதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai