Enable Javscript for better performance
திருநள்ளாறு கோயில் வளாகத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறு கோயில் வளாகத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி திறப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
    திருநள்ளாறு கோயிலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி உள்ளது. இது கோயில் பயன்பாடு மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை எனவும், தொட்டி சிதிலமடைந்து காணப்படுவதாகவும் புதிதாக மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்ட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
    கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரூ. 22 லட்சம் செலவில் 12 மீட்டர் உயரத்தில் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் கட்டுமானப் பணியை கோயில் நிர்வாகம் தொடங்கியது. கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், தொட்டி திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
    நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அலுவலர் ஏ. விக்ராந்த் ராஜா, தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இந்த புதிய தொட்டியில் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேக்கிவைக்க முடியும். கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்குழாய் மூலம் தண்ணீர் ஏற்றம் செய்யப்படும். கோயிலுக்குள் தேவைப்படும் தண்ணீர் முழுவதும் இதன் மூலமே பயன்படுத்தப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீராகவும் சுத்திகரித்து தருவதற்கு பயன்படுத்தப்படும்.
    இதுவரை கோயிலில் தண்ணீர் தேவையில் போதிய திருப்தி இல்லாதிருந்த நிலை, புதிய தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது முதல் மாறிவிடும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai