Enable Javscript for better performance
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
    திருநள்ளாறு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பினர், காரைக்கால் - திருநள்ளாறு பிரதான சாலையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாநில அரசியல் செயலர் அரசு. வணங்காமுடி தலைமை வகித்தார்.
    இதில், துணைச் செயலர் பொன். செந்தமிழ்ச்செல்வன், ""உச்ச நீதிமன்றம் குறித்த கால அவகாசத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் மத்திய அரசு தமிழக, புதுவை மக்களை வஞ்சிக்கிறது. 
    புதுச்சேரி அரசு நியாயவிலைக் கடைகளில் எந்தவொரு அத்தியாவசியப் பொருளும் வழங்குவதில்லை, மாறாக சாராயக் கடைகள் தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கிறது'' என கண்டனம் தெரிவித்துப் பேசினார். மாநில அரசியல் குழுச் செயலர் அ. அரவசரன், துணைச் செயலர் அரசகுமாரி, ரா. வேம்பு மற்றும் தொகுதிச் செயலர் ஆ. வல்லவன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர் பங்கேற்றனர். 
    தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருநள்ளாறு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையை அடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. சாலை மறியலால் திருநள்ளாறு - காரைக்கால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai