Enable Javscript for better performance
மோட்டார் பைக் விற்பனை நிறுவன உரிமையாளர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் போலியாக நடத்தப்பட்ட இருசக்கர வாகன விற்பனை நிறுவன உரிமையாளர் மீது போலீஸார் மார்ச் 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    காரைக்கால் பகுதி வரிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஜி.கே. மோட்டார்ஸ் என்ற பெயரிலான நிறுவனத்தில் பைக் வாங்குவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலை விவரம் கோரியுள்ளார். நிறுவனத்தினர் பைக்கின் விலை ரூ. 61,509 என்றும், முன்தொகை ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், பைக் ஒருவாரத்தில் எடுத்துக்கொள்ளலாம் எஞ்சியத் தொகையை தனியார் வங்கியில் கடன் வசதி செய்துத்தருவதாகக் கூறியுள்ளனர். அதன்பேரில், சீனிவாசன் பைக் நிறுவனத்தினர் கூறியபடி செய்து கடந்த டிச.11-ஆம் தேதி வாகனத்தை வாங்கியுள்ளார்.
     அப்போது, நிறுவனத்தினர் பைக்கின் ஆர்.சி. புத்தகம், காப்பீடு குறித்தவை பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினராம். ஆனால், 3 மாதங்களாகியும் பைக் நம்பர் கிடைக்கவில்லை, ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது அந்த நிறுவனம். இதுசம்பந்தமாக நிறுவன உரிமையாளர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவரது கருத்தில் சந்தேகமடைந்த சீனிவாசன் காரைக்கால் மண்டலப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று விவரம் கேட்டுள்ளார். இதுபோன்ற நிறுவனம் காரைக்காலில் பதிவுடன் நடத்தப்படவில்லை எனவும், நம்பர் பதிவுக்காக வாகனம் தங்களிடம் ஆவணங்கள் கொண்டுவரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
    இதில், அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மார்ச் 28-ஆம் தேதி காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, கணேஷனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai