Enable Javscript for better performance
ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ரங்கநாயகித் தாயார் திருக்கல்யாண உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ரங்கநாயகித் தாயார் திருக்கல்யாண உத்ஸவம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குனி உத்திரத்தையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் - ரங்கநாயகித் தாயார் திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
    மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் உத்திரம் என்பதால் பங்குனி மாத உத்திரத்தில் பெருமாள் கோயில்களில் திருக்கல்யாண உத்ஸவம்  நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.
    காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வைபவம் தொடக்கமாக, மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை முடிந்து, திருக்கல்யாண மேடைக்குத் தாயாரும், பெருமாளும்  எழுந்தருளச் செய்யப்பட்டனர். யாத்ராதானம் முதல் திருக்கல்யாணத்துக்கான அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வாரணமாயிரம் பாசுரம் படித்தல், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் சேர்த்தி நடைபெற்றது. உ.வே.கு. அரங்கநாச்சாரிய சுவாமிகள், தாயார் - பெருமாள் திருக்கல்யாணத்தின் சிறப்பு குறித்து பக்தர்களிடையே உரை நிகழ்த்தினார். பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினரும்,  ஸ்ரீ  நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினரும் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai