Enable Javscript for better performance
அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், மாத இறுதியில் ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தினர்.
    காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கச் செயலர் வாணி தலைமை வகித்தார்.
    அரசுத்துறை  ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாத இறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளிக்கு வழங்கியிருக்க வேண்டிய போனஸை உடனடியாக வழங்க வேண்டும்.
     அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  7-ஆவது ஊதியக்குழுப் பரிந்துரைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    உண்ணாவிரதப் போராட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர்கள்  ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர்  சுப்ரமணியன், பொதுச் செயலாளர்  ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 
    தீயணைப்புத்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன துணைச் செயலாளர் திவ்யநாதன் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
    இப்போராட்டத்தில் சங்கத்  துணைச் செயலாளர்கள் ஜெயந்தி, இசபெல்லா, ஹெலென்மேரி,  முத்துலெட்சுமி உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் பாகீரதி நன்றி கூறினார்.
    கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2-ஆவது கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு அலட்சியம் காட்டிவந்தால், ஊழியர்கள் தொடர் போராடத்தில் ஈடுபட நேரிடும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai