Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைவழங்காததைக் கண்டித்து போராட்டம்:   பெற்றோர் சங்கம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைவழங்காததைக் கண்டித்து போராட்டம்:   பெற்றோர் சங்கம் முடிவு

    By DIN  |   Published on : 18th May 2018 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவை வழங்காததை கண்டித்து ஜூன் 4-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் அ.வின்சென்ட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  குறித்து அவர் கூறியது : அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 6 மாத ஊதிய நிலுவை இருக்கிறது. இதனை வழங்குவதாக அரசு உறுதியளித்தது. ஆனால்  இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும். வரும் கல்வியாண்டில் 1,6, 9, 11-ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாட நூல்கள் வழங்கப்படவுள்ளதால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியை கல்வித்துறை அளிக்கவேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு காலத்தோடு பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும், சிகரத்தை நோக்கி என்கிற கையேட்டினையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    நீட் தேர்வை பிற மாநிலங்களுக்கு சென்று எழுதும் நிலை புதுச்சேரி மாநில மாணவர்களுக்கும் ஏற்பட்டது. இந்த தேர்வை அந்தந்த மாநிலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கைகளை  வலியுறுத்தும் விதமாக வரும் ஜூன் 4-ஆம் தேதி காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.
    கூட்டத்தில் செயலர் கி.மணவாளன், சங்க ஆலோசகர் கே.வீரப்பிள்ளை, பொருளர் எம்.குணசேகரன், துணைத்தலைவர் கே.சுரேஷ் கண்ணா, துணைச் செயலர் ஜி.எம்.எஸ்.குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai