Enable Javscript for better performance
ஆதிதிராவிட மேம்பாட்டுக்கழக நிதிரூ. 1 கோடியில் கிராமப்புற சாலைப் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிட மேம்பாட்டுக்கழக நிதி ரூ. 1 கோடியில் கிராமப்புற சாலைப் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
    காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட தலத்தெரு பகுதி தீப்பாச்சியம்மன் கோயில் தெரு மற்றும் பறவைப்பேட் கிராமத்தில் சாலைப் பணி மேம்படுத்தப்பட்டு நீண்ட காலமாகிறது, சாலைகள் மிகவும் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றுக் காணப்படுகிறது என அந்த பகுதியினர் சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகனிடம் புகார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியாளர்களின் கவனத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கொண்டு சென்ற நிலையில், புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இரண்டு பகுதி சாலைப் பணியை மேம்படுத்த ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காரைக்கால் ஆதிதிராவிட மேம்பாட்டுக்கழக அலுவலகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு பணியாணை தரப்பட்டது. தலத்தெரு பகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பில் மேம்படுத்த வேண்டிய சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் கலந்துகொண்டு புதன்கிழமை தொடங்கிவைத்தார். அதுபோல பறவைப்பேட் பகுதியில் ரூ. 56 லட்சம் மதிப்பிலான பணி பூமி பூஜையிலும் பேரவை உறுப்பினர் கலந்துகொண்டார்.
    இதுகுறித்து சட்டப் பேரவை உறுப்பினர் கூறும்போது, இவ்விரு கிராமப்புறத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சாலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. இச்சாலைப் பணி 6 மாத காலத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலையைத் தரமான வகையில் அமைக்க ஒப்பந்ததாரருக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்.
    பூமி பூஜையில் கலந்துகொண்ட அந்தந்தப் பகுதி கிராமத்தினர் சட்டப் பேரவை உறுப்பினரின் முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர். ஆதிதிராவிட மேம்பாட்டுக் கழக உதவிப் பொறியாளர் கனகசபை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai