Enable Javscript for better performance
ஊதிய உயர்வு விவகாரம்: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வலியுறுத்தி வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கி வாயிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் கே. ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.
    11-ஆவது ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய வங்கிகளின் சங்கமும், மத்திய  அரசும் விரைவாக மேற்கொள்ளவேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு நடவடிக்கை எடுக்கும் நிலையில் 31.10.2017-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டனத்துக்குரியது. முந்தைய காலத்தில் 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 சதவீதம் மட்டுமே என கூறுவது ஏற்கமுடியாது. அலுவலர்கள் நிலை பிரிவு பல உள்ளபோது, 3 நிலை வரை மட்டுமே ஊதிய ஒப்பந்தத்தில் வரும் எனவும் பிற நிலைகள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வராது என கூறுவதும் ஏறக்கூடியது அல்ல என ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கி வேளாண் அபிவிருத்தி கிளை மேலாளர் ரவி கோவிந்தராஜன், கிளைச் செயலர் கே. கோபாலகிருஷ்ணன், கோட்டுச்சேரி கிளைச் செயலர் கே.புனிதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். காரைக்கால் கிளைச் செயலர் எஸ். விஜயகிருஷ்ணன் வரவேற்றார்.  பி.எல். சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai