Enable Javscript for better performance
காரைக்காலில் திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
    காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 17-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றம், பூச்சொரிதலுடன் தொடங்கியது.
    தொடர்ந்து, புதன்கிழமை இரவு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக, வரிசை எடுத்துவந்து திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுனன், திரௌபதி அம்மன் சிறப்பு இருக்கையில் வீற்றிருந்தனர்.
    மாலை மாற்றும் சடங்கு நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்களுடன் திரௌபதி அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து, மகா தீபாராதனை காட்டினர். இறைவனுக்கு திருக்கல்யாணம் நடத்துவதன் சிறப்பு, மகிமைகள் குறித்து சிவாச்சாரியார் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றினர்.
    காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் உள்ளிட்ட  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு தாம்பூலப் பை பிரசாதங்களுடன் வழங்கப்பட்டது.
    முக்கிய நிகழ்ச்சியான தீமிதி வழிபாடு 21-ஆம் தேதி மாலை பழைய ரயிலடி பகுதியில் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி விடையாற்றியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.
    தினமும் மாலை வேளையில் மகா பாரத உபன்யாசம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி வி.என். செங்குட்டுவன் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai